Siragadikka aasai : ரோகிணியைப் பற்றிய உண்மை; வித்யா என்ன செய்வார்? - இந்த வாரம் ...
லாரி மோதி குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலி!
தெலங்கானாவில் ஆட்டோ மீது லாரி மோதி 7 பேர் பலியாகினர்.
தெலங்கானாவில் வாராங்கல் - கம்மம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ரயில் தண்டவாளங்களுக்கான இரும்புகளை ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ ஒன்றின்மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது, லாரியில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததில், லாரியிலிருந்த இரும்புகள் ஆட்டோவின் மீது சரிந்ததில் ஆட்டோ முழுவதுமாக நொறுங்கியது. இந்த நிலையில், ஆட்டோவினுள் இருந்தவர்களில் கைக்குழந்தை உள்பட 7 பேர் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும், சிலர் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க:3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ. 2.1 லட்சம் கட்டணமா?
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.