மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமன ஊழல்: மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்!
மொழிப்போர் தியாகிகள் நாள்: தாளமுத்து, நடராசன் நினைவிடம் திறப்பு!
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் நினைவிடத்தைத் திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் நாள்(ஜன. 25) அனுசரிக்கப்படுகிறது. தமிழ் மொழி உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரவணக்க நாளையொட்டி மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(ஜன. 26) அரிட்டாபட்டி பயணம்?
மேலும், சென்னை கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடங்களைத் திறந்துவைத்து அவர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.