செய்திகள் :

வேங்கைவயல் : ``தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை..!" - திருமாவளவன்

post image

வேங்கைவயல் வழக்கில் 3 பட்டியலின இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதற்கு எதிராக நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் திருமாவளவன். உண்மைக் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாகவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, "வேங்கைவயல் பிரச்னையில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஊள்ளூர் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவை என நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி நியமிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு புகார் அளித்தவர்களே, பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

Vengaivayal

வேங்கைவயல் கிராம மக்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இன்று காலையில் காவல்துறையின் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அச்சுறுத்தி அந்த பகுதியின் விசிக நிர்வாகிகளைக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க அரசு துணையாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

காவல்துறையின் போக்கை, இந்த குற்றப்பத்திரிகையை தமிழக அரசு ஏற்கக் கூடாது.

காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஆடியோ, வீடியோ எல்லாம் ஏற்கெனவே வாட்ஸ்அப்பில் பரவியவைதான். புதிதாக ஒன்றுமில்லை. அவர்கள் டி.என்.ஏ பரிசோதனை செய்வதாகவும் அதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால் டி.என்.ஏ பரிசோதனையின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

திருமாவளவன்

ஏற்கெனவே குற்றப்பிரிவு காவலர்கள் பட்டியலின இளைஞர்களை குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தாக்கியுள்ளனர். மேலும் சிபிசிஐடி காவலர்களும் அவர்களிடம், "நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் பிரச்னை ஏற்படும்" என மிரட்டியுள்ளனர். இவற்றையெல்லாம் நாங்கள் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றோம். இருப்பினும் அதே வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது.

சிபிஐ மீதும் எங்களுக்கு 100% நம்பிக்கை இல்லை. தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் சிபிஐ விசாரணையைக் கோருகிறோம். வேறு வழியில்லை." என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியுமா? - கெஜ்ரிவால்

டெல்லி தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. தற்போது நடந்துவரும் தேர்தல் பிரசாரத்தில் பாஜக ஆம் ஆத்மியை சாடுவதும், ஆம் ஆத்மி பாஜக மேல் குற்றம் சுமத்துவதும் அதிகமாகவும், பரபரப்பாகவும் நடந்துவருகிறது.இந... மேலும் பார்க்க

Trump: `அதிபரான டிரம்பினால் பகுதி நேர வேலையை விட்டு அல்லல்படும் மாணவர்கள்' - காரணம் என்ன?!

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் 'எப்போது... என்ன சட்டம் கொண்டுவரப் போகிறார்?' என்று உலக நாடுகள் தொடங்கி அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் வரை ஒருவித பதற்றத்திலேயே இருந்து வருகின்றனர்.டிரம்ப் தன... மேலும் பார்க்க

"நாங்க ரெடி. .. வாங்க சந்திப்போம்!”-எடப்பாடி பழனிசாமிக்கு சவால்விட்ட செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மாணவர் அணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் உழவர் சந்தை எதிரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சிறிய மாவட்டமாக இரு... மேலும் பார்க்க

TVK : 'வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியே தாமதம்; சிபிஐ இன்னும் தாமதம் ஆகும்' - விஜய் சொல்வதென்ன?

வேங்கை வயலில் நடந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதுக்குறித்து பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பப்பட்டது. தற்போது ... மேலும் பார்க்க

ECR கலைஞர் பன்னாட்டு அரங்கம்: "அடிப்படை வாழ்வாதாரத்தை அழித்து அமைக்கக்கூடாது..." - சீமான் எதிர்ப்பு

``5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 525 கோடி செலவில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வ... மேலும் பார்க்க

Periyar: "சீமான் வியாபார நோக்கத்திற்காக இப்படிப் பேசுகிறார்..." - டிடிவி தினகரன் சொல்வதென்ன?

விருதுநகர் மாவட்ட சட்டமன்றத் தொகுதி அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு பேசி... மேலும் பார்க்க