The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
வானின் இளவரசி.. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய மிகப்பெரிய சரக்கு விமானம்!
சென்னை: வானின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சரக்கு விமானம், 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த பெரிய ரக சரக்கு விமானங்களில் ஒன்றான 747-400 ரக சரக்கு விமானம் ஜோர்டான் நாட்டின் அம்மான் விமான நிலையத்தில் இருந்து 124 டன் சரக்குகளுடன் சென்னை சர்வதேச விமான நிலைய சரக்குகள் கையாளும் பகுதிக்கு வந்து தரை இறங்கியது.