செய்திகள் :

3 குழந்தைகள் உள்பட 5 பேரை கொன்ற முக்கியக் குற்றவாளி சுட்டுக்கொலை!

post image

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேடப்பட்டு வந்த முக்கியக் கொலை குற்றவாளி காவல் துறையினர் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மீரட்டின் லிஸாரி கேட் பகுதியில் கடந்த ஜன.9 அன்று மொயின் (எ) மொயினுத்தீன் (வயது 52) அவரது மனைவி அஸ்மா (45), அவர்களது மகள்கள் அஃப்சா (8), அஜீஸா (4) மற்றும் அதீபா (1) ஆகியோர் தலையில் அடித்து கொல்லப்பட்டனர்.

மேலும், கணவன் மனைவி இருவரின் உடல்களும் போர்வையில் சுற்றப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களது குழந்தைகள் மூவரின் உடல்களும் அலமாரியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மொயினுதீனின் மாற்று சகோதரரான ஜமீல் ஹுசைன் (எ) நயீம் மற்றும் அவரது கூட்டாளி சல்மான் ஆகிய 2 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.

இதையும் படிக்க: மனைவியை செல்போனில் அழைத்து முத்தலாக் கூறிய நபர் கைது!

இதில், முக்கியக் குற்றவாளியான நயீமின் மீது தில்லி மற்றும் தாணேவில் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அடிக்கடி தனது பெயரையும் இருப்பிடத்தை மாற்றி காவல் துறையினரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளார். மேலும், இந்த வழக்கில் அவர்கள் இருவரையும் பிடிக்க காவல் துறையினர் ரூ.50,000 சன்மானம் அறிவித்து தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜன.25) காலை மதீனா காலனி பகுதியில் நயீம் பதுங்கியுள்ளதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, நயீம் தப்பிச் செல்வதற்காக போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதற்கு காவல் துறையினர் நடத்திய பதில் தாக்குதலில் நயீம் மீது குண்டுகள் பாய்ந்து அவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நயீமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சொத்துக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி தற்போது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது கூட்டாளியான சல்மானை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதுதில்லி: உலக புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் புக... மேலும் பார்க்க

டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்

மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டி... மேலும் பார்க்க

மருத்துவர் கே.எம்.செரியன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் சனிக்கிழமை(ஜன.25) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மருத்துவர் செர... மேலும் பார்க்க

தெலங்கானா: லாரியில் இருந்த கம்பிகள் கார், ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம், வரங்கல் மாவட்டத்தில் லாரியில் இருந்த கம்பிகள் கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது விழுந்ததில் கார், ஆட்டோவில் இருந்தவர்களில் 4 பேர் பலியாகினர், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததாக தகவல்... மேலும் பார்க்க

குறுகிய காலத்தில் நிறைவடையும் பிரபல தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் திரவியம் ... மேலும் பார்க்க

பிரமிக்க வைத்த குடியரசு நாள் அலங்கார ஊர்தி!

குடியரசு நாளையொட்டி தில்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.நாடு முழுவதும் குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. குடியரச... மேலும் பார்க்க