`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
வேங்கைவயல் குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு
சென்னை: வேங்கைவயல் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேங்கைவயல் பகுதியில், தனிப்பட்ட விரோதத்தால் 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியின் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில், பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.