The Dark Legacy of Hitler’s Mass Killings | Benito Mussolini | History | Mussoli...
ஐசிசியின் 2024 டி20 அணியில் ரோஹித் கேப்டன்..! 4 இந்தியர்கள் தேர்வு!
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டி20 அணியில் 4 இந்தியர்கள் தேர்வாகியுள்ளார்கள்.
ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டி20 அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, பேட்டர் ரோஹித் சர்மாஆகிய நால்வரும் இடம் பெற்றுள்ளனர்.
இதில் கேப்டனாக ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் 4 இந்தியர்கள், மற்ற 7 வீரர்கள் முறையே ஆஸி, இங்கிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீ., ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கும்.
இதேபோல் டெஸ்ட்டில் கம்மின்ஸ் கேப்டனாகவும் ஒருநாள் போட்டிகளில் சரிதா அசலங்காவும் தேர்வாகியிருந்தார்கள்.
ஐசிசி வெளியிட்ட ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா, ஜடேஜா தேர்வாகியிருந்தார்கள்.
ஐசிசி வெளியிட்ட டி20 அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பிலிப் சால்ட், பாபர் அசாம், நிகோலஸ் பூரன் (கீப்பர்), சிக்கந்தர் ராஸா, ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.