செய்திகள் :

இங்கிலாந்து போராட்டம் வீண்! திலக் வர்மா அதிரடியால் இந்தியா அபார வெற்றி!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து முதலில் விளையாடியது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.

பில் சால்ட் 4 ரன்களிலும், பென் டக்கெட் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். கேப்டன் ஜோஸ் பட்லர் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டி அசத்திய போதிலும், மறுமுனையில் விளையாடிய வீரர்களால் அவருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஹாரி ப்ரூக் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் இருவரும் தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார்.

அறிமுக வீரராக களமிறங்கிய ஜேமி ஸ்மித் அதிரடியாக 12 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய பிரைடான் கார்ஸ் 17 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்‌ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் அபிசேக் சர்மா இருவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

சஞ்சு சாம்சன் 5 ரன்களிலும், அபிசேக் சர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 12 ரன்களிலும், ஜுரேல் 4, பாண்டியா 7 ரன்களிலும் ஆட்டமிழக்க வாசிங்டன் சுந்தர் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸருடன் 26 ரன்கள் விளாசினார்.

தனியாளாகப் போராடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். திலக் வர்மா 55 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரியுடன் 72 ரன்கள் விளாசினார்.

இறுதியில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

சாம் கான்ஸ்டாஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்; உஸ்மான் கவாஜா நம்பிக்கை!

இலங்கைக்கு எதிரான தொடரில் சாம் கான்ஸ்டாஸ் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என நம்புவதாக உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சைம் ஆயூப் விலகியுள்ளார்.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அண்மையில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அ... மேலும் பார்க்க

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற இலங்கை வீரர்!

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சார்பில... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தானுக்கு 254 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது ... மேலும் பார்க்க

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்திய மகளிரணி முன்னேறியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ... மேலும் பார்க்க

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவத... மேலும் பார்க்க