`கோயிலில் அம்மன் சிலையை உடைத்த மர்ம நபர்கள்' - போலீஸ் குவிப்பு
TVK: 'எதிர்ப்புகளை மீறி ஜெயிப்பதுதான் அரசியல் புதியவர்களுக்கான பொறுப்பு, கடமை' - நடிகர் பார்த்திபன்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி ஆண்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் அரசியலுக்கு புதிதாய் வருபவர்கள் எதிர்ப்புகளை மீறி ஜெயிப்பது தான் அவர்களுக்கு இருக்கும் பொறுப்பும், கடமையும் என கூறினார்.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் விதம் பார்த்திபனுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, ``மாணவர்களுக்கு, நேரம் மேலாண்மை, நேரத்திற்கு வேலையை முடித்தல் ஆகியவை மிகவும் முக்கியமானது. குறிப்பாக மாணவர்கள், கடின உழைப்புக்கு முக்கியத்துவம் தருவதைவிட கல்வியைதான் பிரதானமாக எடுக்க வேண்டும். கல்விதான் மாணவர்களின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும்" என்றார்.
இதன்பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னமும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஆட்சிசெய்யும் போது எதிர்க்கட்சிகள் நிறைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பின்னர் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக வரும்போது அதே எதிர்ப்பை ரிப்பீட் மோட்டில் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்தை எதிர்ப்பதை விட, அதை ஆதரித்து நல்ல விஷயங்களை வாங்கிக் கொள்வது நல்லது. மேலும் ஆளுங்கட்சியை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்கள் குற்றம் செய்யும்போது அதை சுட்டிக்காட்ட வேண்டியது மக்களின் கடமை.
டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்து விவகாரம் அரசியல் கட்சியின் வெற்றியல்ல, அது முழுக்க முழுக்க மக்களுக்கான வெற்றி. எனவே அதை தனியொரு கட்சியோ அல்லது தனிப்பட்ட மனிதரின் வெற்றியாகவோ பார்க்க முடியாது.
எந்த ஒரு விவகாரத்திலும், நடிகர்கள் பேசும்போது அவர்கள் பேசுவதை கவனிக்கிறார்களே தவிர அந்த பிரச்னையை கவனிப்பதில்லை. அதனால் பரந்தூர் விமான நிலையம் குறித்து நடிகர் சங்கம் போராட்டம் நடத்துவதை விட அந்த விவகாரத்தில் தமிழக அரசு தீர்வு காண்பது தான் நல்லது.
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு மக்களின் ஆதரவு முழுமையாக கிடைக்குமென்றால், அரசாங்கம் நினைப்பதை செய்ய முடியாமல் போகும். எனவே, த.வெ.க. தலைவர் விஜய்யை போராட்ட களத்திற்கு செல்ல விடாமல் தடுத்தது இயல்பான விஷயம்தான். அவரை போராட்ட களத்திற்குள் அனுமதிக்காதது, அதிகாரத்தில் இருக்கும் எந்தக் கட்சியாக இருந்தாலும் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக செய்கின்ற விஷயம் தான். இதைமீறி ஜெயிக்க வேண்டியது புதிதாக வருபவர்களுக்கான மிகப்பெரிய பொறுப்பாகவும் கடமையாக இருக்கும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs