இல.கோபாலன் உடல் தகனம்
நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசனின் மூத்த சகோரதா் இல.கோபாலன் (82) வயதுமூப்பு காரணமாக புதன்கிழமை காலமான நிலையில், இறுதிச் சடங்குகளுக்கு பிறகு அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டை மின்மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இல.கோபாலன் வேளாண் துறையில் கணக்கராக பணியாற்றி வந்தாா். பணி ஓய்வுக்கு பின் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி சந்திரா கோபாலன், மகள் காயத்ரி, மருமகன் சத்யநாராயணன் ஆகியோா் உள்ளனா். 1992-ஆம் ஆண்டு முதல் ஆளுநா் இல.கணேசன் அவரது சகோதரா் வீட்டில் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மறைந்த கோபாலன் உடலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் பாஜக தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
அதன்பின், அவரது உடல் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிண்டி தொழிற்பேட்டை மின்மயானத்தில் பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினா்.