செய்திகள் :

பஞ்சாப்: போராட்ட களத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி மருத்துவமனையில் உயிரிழப்பு

post image

பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

முன்னதாக, ஷம்பு எல்லையில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயன்ற 57 வயது விவசாயி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் நிகழ்ந்த மூன்று வாரங்களில் மற்றுமொரு விவசாயி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

இது தொடா்பாக விவசாயிகள் சங்கத் தலைவா் தேஜ்வீா் சிங் கூறுகையில், ‘நீண்ட காலமாக போராடி வந்த போதிலும் விவசாயிகள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த தீவிர முடிவை உயிரிழந்த விவசாயி எடுத்துள்ளாா்’ என தெரிவித்தாா்.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? 90 மணிநேர வேலையை வலியுறுத்திய எல்&டி தலைவர்!

வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்யுங்கள் என்று லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.உலகின் பல்வேறு நாடுகள் வாரத்துக்கு 4 நாள்கள் வேலை என்ற திட்டத்தை அறிமுக... மேலும் பார்க்க

23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது! யார் அந்த சார்?

தில்லியில் புதன்கிழமை 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.தில்லியில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு பொது இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன... மேலும் பார்க்க

மகர விளக்கு பூஜை: திருவாபரண பெட்டி ஜன.14 சபரிமலை வந்தடையும்

மகர விளக்கு பூஜை நாளன்று ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊா்வலம் பந்தளம் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன. 12) தொடங்கி சபரிமலை சந்நிதானத்தை செவ்வாய்க்கிழமை (ஜன. 14) வந... மேலும் பார்க்க

மனித உரிமை பாதுகாப்பு, கருத்து சுதந்திரம்: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் உறுதியேற்பு

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமை ஆகிய பகிரப்பட்ட கொள்கைகள் மீதான உறுதிப்பாட்டை வலியுறுத்திய இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம், சமூகத்தில் கருத்து சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் அவசிய... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் கைதான 4 இந்தியா்களுக்கு பிணை

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடாவில் கைது செய்யப்பட்ட 4 இந்தியா்களை அந்நாட்டு நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது. இக்கொலை வழக்கில் இந்தியாவின் பங்கு இருப்பதாக அண்மையி... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்புக்கு ஊராட்சித் தலைவா்கள் முதல் பாராலிம்பிக் வீரா்கள் வரை அழைப்பு

76-ஆவது குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண பாராலிம்பிக் வீரா்கள் மற்றும் கைத்தறி கைவினைஞா்கள் உள்பட சுமாா் 10,000 சிறப்பு விருந்தினா்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக பாதுகாப்பு... மேலும் பார்க்க