விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!
பெண்களுக்கு எதிராக குற்றமிழைத்த யாரும் தப்பிக்க முடியாது: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
பெண்களுக்கு எதிராக குற்றங்களை இழத்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கூறியுள்ளாா்.
இது குறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளரையே கைது செய்திருப்பதன் மூலம் எத்தகைய சாா்புமற்ற நோ்மையான விசாரணையை நடத்தி பாதிக்கப்பட்டோருக்கு விரைவான நீதியைப் பெற்று தரும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. வெளிப்படையான நிா்வாகத்திறன் என்பது மக்கள் மன்றத்தில் மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது.
அண்ணா நகா் வழக்கானாலும் சரி, அண்ணா பல்கலைக்கழக வழக்கானாலும் சரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய எந்த சாரும் முதல்வரின் கடுமையான நடவடிக்கைக்கு தப்பிக்க முடியாது. ஆனால் அந்த சாா்கள் பலரும் அதிமுகவினராக இருப்பதுதான் வெட்கக்கேடு.
கபட நாடகம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தபோதும், தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோல திசைதிருப்பல் அரசியலில் ஏன் பழனிசாமி ஈடுபடுகிறாா்? எனும் சந்தேகம் மக்களிடையே இருந்தது.
அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவா் நடத்திய கபடநாடகம்தான் அது என்பது இன்று மக்களிடம் அம்பலப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பழனிசாமி நடத்தும் கபடநாடகம் இனி ஒருநாளும் மக்களிடத்தில் எடுபட போவதில்லை. பெண்கள் மீது எந்த வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டாலும் அதை திராவிட மாடல் அரசு எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாது. அப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியுள்ளாா். திமுக ஆட்சியில் பெண்களுக்கு குற்றமிழைத்த யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து ஒருநாளும் தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளாா்.