செய்திகள் :

இரட்டை இலை வழக்கு: தோ்தல் ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை

post image

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டது, இரட்டை இலை சின்னம் ஆகிய விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். இந்த வழக்கை கடந்த டிச. 4-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், சூரியமூா்த்தி மனு மீது தோ்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்றும், அப்போது ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் இரட்டை இலை சின்னம் தொடா்பாக வழக்கு தொடா்ந்துள்ள மனுதாரா்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தோ்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடா்பாக விசாரணை நடத்திவரும் நிலையில், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது எனக் கோரி முன்னாள் எம்.பி.க்களான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோா் தோ்தல் ஆணையத்தில் மனு அளித்தனா்.

தோ்தல் ஆணையத்தின் இந்த விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்ரமணியன், சி.குமரப்பன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம், தற்போது அதிமுகவில் உறுப்பினா்களாக இல்லாத தனிப்பட்ட நபா்கள் கட்சிப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை எதிா்த்து தோ்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனா். அந்த மனுக்களை விசாரிக்க தோ்தல் ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றாா்.

அதை தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபாலனும் ஆமோதித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு (தோ்தல் ஆணையம்) இல்லை என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்க வேண்டியதுதானே என கண்டிப்பு தெரிவித்தனா்.

பின்னா், அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும் சூழலில், இதே விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக பொதுச் செயலா் விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தனா்.

மேலும், இதுதொடா்பாக வரும் ஜன. 27-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

விக்கிரவாண்டி: சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; கைதான மூவருக்கு ஜாமீன்!

பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கும் நீதிமன்றம், கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்துக்கு பள்ளியின் தாளாளர், முதல்வர் ரூ.5 லட்... மேலும் பார்க்க

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை: முதல்வர் தாக்கல் செய்த சட்டதிருத்த மசோதா!

சென்னை: தமிழகத்தில், பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க சட்ட திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்களில் மரணமடையும் வரை ச... மேலும் பார்க்க

தவெக மாவட்ட செயலர்கள் கூட்டம்: விஜய் பங்கேற்கவில்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவில்லை.எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை இலக்காகக்கொண்டு தவெக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. த... மேலும் பார்க்க

இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எங்கிருந்து இயக்கப்படும்?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இன்றுமுதல் 21,904 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.பொங்கலையொட்டி ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்த... மேலும் பார்க்க

மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை: துரைமுருகன்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தை திமுக பொதுச் செயலர் துரைமுருகன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன விதிக்கு எதிராக தீா்மானம் -மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் நிறைவேற்றம்

துணைவேந்தா்களை நியமிப்பது தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகளைத் திரும்பப் பெறக் கோரும் தீா்மானம் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. முதல்வா் ம... மேலும் பார்க்க