நேபாள - திபெத் நிலநடுக்கம்: 32 பேர் பலி!
நேபாளம் - திபெத் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் திபெத் - நேபாளம் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக் கோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது சீனாவில் திபெத் பகுதிகள், இந்தியாவில் பிகார் மற்றும் வட மாநிலங்களில் உணரப்பட்டது.
இதையும் படிக்க : பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
திபெத் பகுதிகளில் பல கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்து விழுந்ததாகும் இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் பதிவாகவில்லை.
நேபாளம் - திபெத் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமானது என்றாலும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் 200 கி.மீ. சுற்றளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.