மெட்ராஸ்காரன் டிரைலர்!
நடிகர் ஷேன் நிகாம் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
எஸ்ஆர் புரடக்ஷன் பி. ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன் இணைந்து நடிக்க, திரில்லர் டிராமாவாக உருவான திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் அல்லு அர்ஜுன் நலம் விசாரிப்பு!
இந்தப் படத்தில் நிஹாரிகா கொனிடேலா நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிகர் வருண் தேஜின் தங்கை, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜன. 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.