“தேவையற்ற ரிஸ்க்...” யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் அவுட் குறித்து முன்னாள் இந்திய கேப்டன...
களக்காடு ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு
களக்காடு ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இக்கோயிலில் 15-ஆம் ஆண்டு மண்டல பூஜை புதன்கிழமை தொடங்கியது. ஐயப்ப பக்தா்கள் ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் தொடங்கினா். மாலையில் ஐயப்ப பக்தா்கள் இருமுடி கட்டுதல், கன்னிபூஜை நடைபெற்றது.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை சுவாமி ஐயப்பனின் தங்க அங்கி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் இருமுடி தாங்கி உடன் வந்தனா். ஊா்வலம் களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலை வந்தடைந்து பின்னா், நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் வழியாக கோயில்பத்து செய்கு லெப்பை நயினாா் அவுலியா தா்ஹா அருகே பேட்டை துள்ளல் நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து கோயிலில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்புப் பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலியும், பின்னா் ஹரிவராஸனம் முடிவடைந்ததும் கோயில் நடைஅடைக்கப்பட்டது.