செய்திகள் :

மேட்ரிமோனி ஆப் மூலம் திருமண மோசடி; ஆசைகாட்டி பணம் பறித்த பெண் கைது!

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயியான இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடியுள்ளார். இதற்காக பல்வேறு மேட்ரி மோனி ஆப்பில் விவரங்களை பதிவு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் தன் விவரங்களை மேட்ரி மோனி ஆப்பில் பதிவு செய்துள்ளார்.

மேட்ரிமோனி

கடந்த 2023ம் ஆண்டு மயில்சாமி, பிரியா பேசத் தொடங்கியுள்ளனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போனதால் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். ஒருமுறை பிரியா, “தனது அக்காவுக்கு மிகவும் உடல் நலம் சரியில்லை.  மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும்.” என்று மயில்சாமியிடம் கேட்டுள்ளார்.

மயில்சாமியும் பணம் கொடுத்துள்ளார். இதே பாணியில் பிரியா அடிக்கடி பணம் கேட்டு வாங்கியுள்ளார். மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் வரை சுமார் ரூ. 7.12 லட்சம் பிரியாவுக்கு கொடுத்துள்ளார். பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, பிரியா திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதால் மயில்சாமி அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

பிரியா கொடுத்த முகவரிக்கு நேரடியாக சென்று பார்த்துள்ளார். அப்போது அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மயில்சாமி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகாரளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், பிரியா சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறை சேலம் விரைந்து பிரியாவை கைது செய்தனர். பிரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரியா ஏற்கெனவே மூன்று முறை திருமணமானவர். முதல் கணவர் உயிரிழந்துவிட, இரண்டாவது கணவரை விவகாரத்து செய்துள்ளார்.

திருமண மோசடி பெண் பிரியா

மூன்றாவது கணவரை பிரிந்து, கடந்த சில மாதங்களாக சேலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் லிவிங் டூ கெதர்  ரிலேஷன் ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவர்  மேட்ரிமோனி ஆப்பில் முகவரி, சாதி குறித்து தவறான தகவல்களை பதிவு செய்து, பல ஆண்களை ஏமாற்றியுள்ளார். இதே பாணியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.

Digital Arrest: ``கழிவறையிலும் வீடியோ கால்.." - அத்துமீறி பணம் பறித்த மோசடி கும்பல்!

Digital Arrest: 8 நாள்களாக வீட்டில் சிறை..நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டில்... மேலும் பார்க்க

RBI Warns: பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் சார்ஜர் போடும் இடங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம்...சில நேரங்களில், அதில் நம் போன்களுக்கு சார்ஜர் கூட போட்டிருப்போம். இந்த மாதிரியான சூழல்களில் ஜாக்கி... மேலும் பார்க்க

Mumbai: ``காமெடி ஷோ நடத்த வாங்க..'' - காமெடி நடிகரை கடத்தி மிரட்டி பணம் பறித்த கும்பல்!

மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காமெடி நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று கூறி அழைத்தனர். அவருக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்தனர். சுனில் பால... மேலும் பார்க்க

இந்திய அளவில் டிரெண்டிங் ஆன 35% ஜி.எஸ்.டி…ஏழை, நடுத்தர மக்களை பாதிக்குமா..?

ஜி.எஸ்.டி... அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நாளொரு சர்ச்சைதான். சிகரெட், புகையிலை, கார்பனேட்டட் குளிர்பானங்கள் உள்ளிட்ட ஆடம்பர மற்றும் பாவப் பொருள்களுக்கான (Sin Goods) ஜி.எஸ்.டி... 28%-லிருந்து 35%-ஆக... மேலும் பார்க்க

'போதை மருந்து கடத்தல், ஊழலில் பங்கு...' - பெருகும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகள்... தப்பிப்பது எப்படி?!

டிரிங் டிரிங்"மும்பை போலீஸ் பேசுறோம். உங்க பேர் ரவி தானே?""ஆமா சார்". "உங்க பேர் மற்றும் அட்ரஸுக்கு துறைமுகத்துல நாலு பாக்ஸ் போதைப்பொருட்கள் வந்து இறங்கியிருக்கு. உங்களுக்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?"... மேலும் பார்க்க

``ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால் தான் வீடு கட்ட‌‌ அனுமதிக்க முடியும்'' - கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் அரசு மற்றும் தனியார் தரப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் நடைமுறையில் இருக்கிறது. தடைசெய்யப்பட்ட கனரக இயந்திர பயன்பாட்ட... மேலும் பார்க்க