செய்திகள் :

இந்திய அளவில் டிரெண்டிங் ஆன 35% ஜி.எஸ்.டி…ஏழை, நடுத்தர மக்களை பாதிக்குமா..?

post image

ஜி.எஸ்.டி... அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நாளொரு சர்ச்சைதான். சிகரெட், புகையிலை, கார்பனேட்டட் குளிர்பானங்கள் உள்ளிட்ட ஆடம்பர மற்றும் பாவப் பொருள்களுக்கான (Sin Goods) ஜி.எஸ்.டி... 28%-லிருந்து 35%-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதுதான் இப்போதைய புதிய சர்ச்சை!

‘நடுத்தர மக்களுக்குச் சுமையாக மாறும், நாட்டின் வளர்ச்சி பாதிக்கும்’ என்றெல்லாம் ஒருதரப்பினர் விமர்சிக்க, சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகியிருக்கிறது 35% ஜி.எஸ்.டி.

அதேசமயம், ‘இந்த வரி உயர்வானது, மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருள்களுக்கே. இதனால், நுகர்வு குறைந்தால், மக்களின் ஆரோக்கியமும் சூழலும் மேம்படும்... அவர்களுடைய பணமும் மிச்சமாகும்’ என்று மற்றொரு தரப்பு ஆதரவு கொடி பிடிக்கிறது.

‘10,000 ரூபாய்க்குக் குறைவான விலையுள்ள சைக்கிள்கள், மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகங்களுக்கு 12% ஜி.எஸ்.டியை 5% ஆகவும், டேர்ம் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம், 20 லிட்டர் குடிநீருக்கான ஜி.எஸ்.டி 18%-லிருந்து 5% ஆகவும் குறைக்கச் சொல்லி கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தில் பரிந்துரைத்ததையும் கவனிக்க வேண்டும்’ என்கிறார்கள் இவர்கள்.

அரசின் நோக்கம் 100% தூய்மையாக இருக்கும்பட்சத்தில், விமர்சனங்களைக் கடந்து இதை நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், நோக்கம் நிச்சயம் நிறைவேற முன்னெடுப்புகளை கையில் எடுக்க வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, வருமான வரி என்பதையே நீக்கிவிட்டு, நுகர்வு பொருள்களுக்கான வரி என்பதை மட்டுமே முன்னெடுக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது. வரி ஏய்ப்பு தொடர்கதையாகவே இருப்பதுதான், காரணம்.

140 கோடி பேர் இருக்கும் நாட்டில்... 2 கோடி பேர் மட்டும்தான் வரி செலுத்து கிறார்கள் (2022-23 நிதிஆண்டு). உண்மையில், பணக்காரர்களைக் கணக்கெடுத்தால், இன்னும் பல கோடி பேர் பட்டியலுக்குள் வந்துவிடுவார்கள். ஆனால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கொண்டுள்ளனர்.

இதை வைத்துதான், ‘வருமான வரியை ஏமாற்றிவிட முடியும். ஆனால், நுகர்வோர் என்கிற வகையில் வாங்கும் பொருள்களுக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும். ஆடம்பர மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பொருள்களை வசதிக்கேற்ப வாங்கிக் குவிப்பவர்கள், அதற்கேற்ப வரியைக் கட்டினாலே போதும்... பல மடங்கு பணம் அரசாங்க கஜானாவில் குவியும்’ என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது.

ஆக, இப்போதைக்கு அத்தியாவசிய பொருள்களுக்குக் குறைவான வரியும், ஆடம்பர, பாவப் பொருள்களுக்கு அதிகமான வரியும் விதிக்க முனைந்திருப்பது சரியானதே! வரி வருவாயும் முக்கியம், வளர்ச்சியும் முக்கியம், மக்களின் நலனும் முக்கியம் அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கும் வகையில் கொள்கைகளை வகுப்பதே நல்லரசுக்கு அடையாளம்!

- ஆசிரியர்

Digital Arrest: ``கழிவறையிலும் வீடியோ கால்.." - அத்துமீறி பணம் பறித்த மோசடி கும்பல்!

Digital Arrest: 8 நாள்களாக வீட்டில் சிறை..நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக வீட்டில்... மேலும் பார்க்க

மேட்ரிமோனி ஆப் மூலம் திருமண மோசடி; ஆசைகாட்டி பணம் பறித்த பெண் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயியான இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடியுள்ளார். இதற்காக பல்வேறு மேட்ரி மோனி ஆப்பில் விவரங்களை பதிவு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்... மேலும் பார்க்க

RBI Warns: பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் சார்ஜர் போடும் இடங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம்...சில நேரங்களில், அதில் நம் போன்களுக்கு சார்ஜர் கூட போட்டிருப்போம். இந்த மாதிரியான சூழல்களில் ஜாக்கி... மேலும் பார்க்க

Mumbai: ``காமெடி ஷோ நடத்த வாங்க..'' - காமெடி நடிகரை கடத்தி மிரட்டி பணம் பறித்த கும்பல்!

மும்பையைச் சேர்ந்த காமெடி நடிகர் சுனில் பால் என்பவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் காமெடி நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று கூறி அழைத்தனர். அவருக்கு விமானத்தில் டிக்கெட் எடுத்து கொடுத்தனர். சுனில் பால... மேலும் பார்க்க

'போதை மருந்து கடத்தல், ஊழலில் பங்கு...' - பெருகும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடிகள்... தப்பிப்பது எப்படி?!

டிரிங் டிரிங்"மும்பை போலீஸ் பேசுறோம். உங்க பேர் ரவி தானே?""ஆமா சார்". "உங்க பேர் மற்றும் அட்ரஸுக்கு துறைமுகத்துல நாலு பாக்ஸ் போதைப்பொருட்கள் வந்து இறங்கியிருக்கு. உங்களுக்கு அதுக்கும் என்ன சம்பந்தம்?"... மேலும் பார்க்க

``ரூ.30,000 லஞ்சம் கொடுத்தால் தான் வீடு கட்ட‌‌ அனுமதிக்க முடியும்'' - கையும் களவுமாக சிக்கிய அதிகாரி

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் அரசு மற்றும் தனியார் தரப்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் தடைகளும் நடைமுறையில் இருக்கிறது. தடைசெய்யப்பட்ட கனரக இயந்திர பயன்பாட்ட... மேலும் பார்க்க