செய்திகள் :

இந்திய தேர்தல், ஆளுங்கட்சி குறித்து மார்க் ஸக்கர்பெர்க் சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரியது மெட்டா நிறுவனம்

post image

ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் தலைமை நிறுவனமான மெட்டாவின் தலைமை அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் அளித்த பேட்டியொன்றில் இந்தியாவில் தேர்தல்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.

“கரோனா பெருந்தொற்று பரவலுக்குப் பின் நடைபெற்ற தேர்தல்களில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் மக்களிடையே அதிருப்தியைப் பெற்றுள்ள ஆளும் கட்சிகள் உள்பட அரசியல் கட்சிகள் பல, தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார் மார்க் ஸக்கர்பெர்க்.

இதனையடுத்து, மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ள கருத்துகள் தரவுகளின்படி தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை கடந்த தேர்தலில் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றார். மேலும், மெட்டா நிறுவனம் மேற்கண்ட கருத்துகளுக்கு பொறுப்பேற்று பதிலளிக்கவும் கோரியிருந்தார்.

இதனிடையே, இவ்விவகாரத்தில் மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி விளக்கமளிக்குமாறு கோர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் நிஷிகாந்த் துபே நேற்று(ஜன. 14) தெரிவித்தார்.

இந்த நிலையில், மேற்கண்ட விவகாரத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்த கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மெட்டா நிறுவனம் இன்று(ஜன. 15) தெரிவித்துள்ளது.

“2024-ஆம் ஆண்டு தேர்தல்களில், உலகின் பல நாடுகளிலும் மக்களிடையே அதிருப்தியைப் பெற்றுள்ள ஆளும் கட்சிகள் உள்பட அரசியல் கட்சிகள் பல, தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற முடியவில்லை என்று மார்க் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டிருந்ததில், ‘இந்தியா மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்துவிட்டது’. மார்க் ஸூக்கர்பெர்க் எவ்வித உள்நோக்கமுமின்றி எதேச்சையாக பேசிவிட்டதாகவும்” தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார் மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் ஷிவ்நத் துக்ரல்.

இதனையடுத்து, இந்திய தேர்தல்கள் குறித்து மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்திருந்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளான விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்திருப்பதாக பாஜக தலைவர் நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்: ராகுல் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மட்டுமல்ல, இந்திய அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடுவதாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலை... மேலும் பார்க்க

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை: மாயாவதி

இந்தியா கூட்டணிக்கு எதிர்காலம் இல்லை என்றும் பாரதிய ஜனதாவுக்கு மாற்றுக் கட்சி பகுஜன் சமாஜ்தான் எனவும் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச முன்ன... மேலும் பார்க்க

இஸ்கான் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

மும்பை : நவி மும்பையில் உள்ள கர்கார் பகுதியில் கட்டப்பட்டுள்ள இஸ்கான் கோயிலை இன்று(ஜன. 15) திறந்துவைத்தார் பிரதமர் மோடி.அப்போது அவர், “இஸ்கான் கோயிலானது நம்பிக்கை, தத்துவம் மற்றும் ஞானத்தின் மையமாக தி... மேலும் பார்க்க

2024-ல் சொகுசு வீடுகளின் விற்பனை 53% அதிகரிப்பு!

நாட்டில், வீட்டு வாடகைக்குத் திண்டாடும் மக்களுக்கு இடையே, ரூ.4 கோடி மற்றும் அதற்கு மேல் விலையுள்ள சொகுசு வீடுகளின் விற்பனை கடந்த 2024ல் 53 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலகளாவிய வணிக ரியல் எஸ்டேட் சேவைகள... மேலும் பார்க்க

வேட்புமனு தாக்கல் செய்தார் கேஜரிவால்!

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புது தில்லி தொகுதியில் புதன்கிழமை வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்கிறாரா ரோஹித் சர்மா?

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.சாம்பியன்ஸ்டிராபி வருகிற பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இ... மேலும் பார்க்க