இஸ்கான் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
மும்பை : நவி மும்பையில் உள்ள கர்கார் பகுதியில் கட்டப்பட்டுள்ள இஸ்கான் கோயிலை இன்று(ஜன. 15) திறந்துவைத்தார் பிரதமர் மோடி.
அப்போது அவர், “இஸ்கான் கோயிலானது நம்பிக்கை, தத்துவம் மற்றும் ஞானத்தின் மையமாக திகழ்கிறது. இந்திய தேசம் வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல.. இது கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வாழிம் பூமி. இங்கு ஞானம் என்பது ஆன்மீகத்தை பற்றி அறிவதேயாகும்” என்று பேசியுள்ளார்.