செய்திகள் :

தென் கொரியாவில் பதற்றம்! பதவி விலகியுள்ள அதிபர் யூன் சுக் இயோல் கைது

post image

சியோல் : தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மிகுந்த பரபரப்புக்கிடையே அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரிய வரலாற்றில் அதிபர் பதவி வகித்து வருபவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கைது நடவடிக்கைக்கு என்ன காரணம்?

முன்னதாக, தென் கொரிய நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சியினா் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் தெரிவித்து, கடந்த மாதம் தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாகக் கடந்தாண்டு டிசம்பரில் இயோல்(64) அறிவித்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.

எனினும் இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவிநீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, அவா் தற்காலிகமாக பதவி விலகினாா். எனினும், தற்போது வரை அவரே அதிபராக நீடிக்கிறார்.

இந்த நிலையில் அவரை நிரந்தரமாகப் பதவிநீக்கம் செய்வது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேவேளையில், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து, அவரை காவல் துறையினா் கைது செய்ய கடந்த சில நாள்களாக முயற்சித்து வந்த நிலையில், அவா்களை இயோலின் பாதுகாவல் படையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, தங்களின் முயற்சியைக் கைவிட்டு காவல் துறையினா் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், அவர் இன்று(ஜன. 15) கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊழல் விசாரணை அலுவலக(சிஐஓ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீதான குற்ரசாட்டுகல் குறித்த விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கப் போவதாக இயோல் தெரிவித்துள்ளார்.

காஸா போர்நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்!

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இர... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: பலர் மாயம்.. உயிரிழப்பு 25-ஆக உயர்வு!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பே... மேலும் பார்க்க

பிரிட்டன் மருத்துவமனையில் கத்திக்குத்து: இந்திய செவிலியர் கவலைக்கிடம்

பிரிட்டனில் உள்ள ராயல் ஓல்தம் மருத்துவமனையில் பணியில் இருந்த இந்திய செவிலியர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அச்சம்மா செரியன் ... மேலும் பார்க்க

ஜனவரியை பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்!

ஜனவரியை பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.இந்திய - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனவரி மாதத்தை தமிழ் ... மேலும் பார்க்க

தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!

தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை இரண்டாவது முறையாக கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர்.தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவரைக் கைது ச... மேலும் பார்க்க

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

பிரேசிலில் மதுபோதையில் பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர், பசு உதைத்ததில் பலியானார்.பிரேசில் நாட்டில் லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் பண்ணையில் பால் கறக்கும் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இருவரும் கடந... மேலும் பார்க்க