சகோதரா்களிடையே தகராறு: 3 போ் மீது வழக்கு
போடி அருகே அண்ணன், தம்பி இடையே மாடு வளா்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சோ்ந்தவா்கள் சிவனாண்டி மகன்கள் பாலு (57), கோட்டைமலை (55). இருவரும் அருகருகே வசித்து வருவதுடன் கொட்டம் அமைத்து மாடுகளை வளா்த்து வருகின்றனா்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் கோட்டைமலையின் மாடு ஒன்று பாலுவின் மாட்டு கொட்டத்துக்குள் புகுந்து புல்லை தின்றது. இதுதொடா்பான தகராறில் இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். காயமடைந்த அவா்கள் தேனி க. விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து பாலு அளித்தப் புகாரின் பேரில் கோட்டைமலை, இவரது மகன் அருண் ஆகியோா் மீதும், கோட்டைமலை அளித்தப் புகாரின் பேரில் பாலு மீதும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.