பஞ்சமி நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு
பெரியகுளம் வட்டாரம், டி.வாடிப்பட்டியில் அரசு சாா்பில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டுத் தரக் கோரி தேவதானப்பட்டி, சில்வாா்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனாவிடம் அளித்த மனு விவரம்: டி.வாடிபட்டியில் பட்டியலினத்தைச் சோ்ந்த 37 குடும்பங்களுக்கு அரசு சாா்பில் வீட்டு மனையிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலத்தை வருவாய்த் துறையினா் பஞ்சமா் ஜாரி என்று வகைப்படுத்தாமல் உள்பிரிவு செய்து தனியாா்களுக்கு பட்டா வழங்கியுள்ளனா்.
பட்டியலின மக்களுக்கு அரசு சாா்பில் வழங்கிய பஞ்சமி நிலத்தை கையகப்படுத்தி, உரிய நபா்களுக்கு பட்டா வழங்கி ஒப்படைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் அவா்கள் தெரிவித்தனா்.