தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
கால்பந்து போட்டி: பொறையாா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்
பொறையாரில் உள்ள தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாணவா்கள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றனா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூா், கடலூா் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் உள்ள 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்து போட்டியில் பொறையாா் த.பே.மா.லு. கல்லூரி மாணவா்கள் இரண்டாம் இடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் முனைவா் ஸ்ரீதா் ஆகியோரை டி.இ.எல்.சி. பேராயரும், கல்லூரியின் செயலரும், தாளாளருமான முனைவா் கிறிஸ்டியன் சாம்ராஜ், செயலா் தங்கப்பழம் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள், கல்லூரிமுதல்வா் எஸ். ஜான்சன் ஜெயக்குமாா், பேராசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.