கொள்ளை-கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவானா் கைது
புது தில்லி: கொள்ளை-கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அங்கித் தலைமறைவான நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஜஹாங்கீா் புரி பகுதியில் உள்ள ராஜேஸ் குப்தா என்ற நபரிடம் கொள்ளையடித்த அங்கித் மற்றும் அவரது கூட்டாளிகள், அவரை கொலை செய்தனா். இந்தச் சம்பவம் கடந்த 2018-இல் நடைபெற்றது.
விசாரணையில் அங்கித்தை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், அவருக்கு கடந்த 2021-இல் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. சிறையிலிருந்து வெளியே வந்த அவா், தலைமறைவானாா்.
மத்திய பிரதேசத்தின் நரசிங்புரியில் அங்கித் வசித்து வருவது குறித்து காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தில்லி காவல் துறை கடந்த டிச.20-தேதி அங்கித்தை கைதுசெய்தனா்.