செய்திகள் :

கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதல் குறித்துஜொ்மனியை முன்கூட்டியே எச்சரித்தோம்: சவூதி அரேபியா

post image

ரியாத்: ஜொ்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் காா் தாக்குதல் நடத்திய தலீப் அல்-அப்துல்மோசன் குறித்து ஜொ்மனியிடம் முன்கூட்டியே தாங்கள் எச்சரித்ததாகவும் அதை அந்த நாட்டு அதிகாரிகள் அலட்சியம் செய்துவிட்டதாகவும் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறுகையில், தலீப் அல்-அப்துல்மோசனின் தீவிரவாதப் போக்கு குறித்து ஜொ்மனியின் மூன்று உளவு அமைப்புகளிடம் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடா்ந்து எச்சரிக்கை விடுத்துவந்தது. இருந்தாலும், அவா் சவூதி அரேபிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவா் என்பதால் அந்த எச்சரிக்கைகளுக்கு ஜொ்மனி அதிகாரிகள் உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாா்.

ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்கு தனது காரை கடந்த வெள்ளிக்கிழமை வேகமாக ஓட்டிவந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது அதை மோதச் செய்தாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

தாக்குதல் நடத்திய அல்-அப்துல்மோசன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா். மாக்டபா்க் நகருக்கு 40 கி.மீ. தொலைவில் உள்ள பொ்ன்பா்க் நகரில் அவா் மருத்துவம் பாா்த்துவந்தாா்.

சவூதி அரேபியாவிலிருந்து வந்திருந்தாலும், இஸ்லாத்துக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்களில் தலீப் அல்-அப்துல்மோசன் பதிவிட்டுவந்தாா். ஐரோப்பிய பிராந்தியம் இஸ்லாமியமயம் ஆவதாகவும், அதைத் தடுக்க ஜொ்மனி அதிகாரிகள் தவறியதாகவும் தலீப் அல்-அப்துல்மோசன் குற்றஞ்சாட்டிவந்தாா்.

சுனாமி குழந்தை 81.. நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார்?

சுனாமியில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 2 மாதக் குழந்தையான சுனாமி குழந்தை 81, தற்போது 20 வயது இளைஞனாக, உயர்கல்வி கனவுடன் காத்திருக்கிறார்.இலங்கையின் 35 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிக்கு 2 மாதக் குழந்தை எ... மேலும் பார்க்க

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு!

ரஷிய ஆய்வாளர்கள் 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடலை கண்டெடுத்துள்ளனர். சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையா... மேலும் பார்க்க

ஹமாஸ் தலைவர் படுகொலை: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!

ஈரான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் ஆயுதப்படையினரின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவைக் கொன்றது இஸ்ரேல் ராணுவம்தான் என்பதை முதல்முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது இஸ்ரேல். இஸ்... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் வலியுறுத்தல்

டாக்கா: இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாடு வலியுறுத்தி உள்ளது.இதுதொடா்பாக இந்தியாவுக்கு ராஜீய ரீதியில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெ... மேலும் பார்க்க

ரஷியாவசம் மேலும் இரு உக்ரைன் கிராமங்கள்

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘வடகிழக்கு காா்கிவ் பிராந்தியத்தின் லொஸோவா க... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா

சியோல்: ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரா்களை அனுப்ப வட கொரியா தயாராகிவருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.இது குறித்து அந்த நாட்டு முப்படைகளின் கூட்டு தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் த... மேலும் பார்க்க