செய்திகள் :

50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடல் கண்டெடுப்பு!

post image

ரஷிய ஆய்வாளர்கள் 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

சைபீரியாவில் உள்ள யாகுடியா பகுதியில் பெர்மாஃப்ரோஸ்ட் எனப்படும் உறைநிலையில் உள்ள இடத்தில் இருந்து 50,000 ஆண்டுகள் பழமையான மாமூத் யானைக் குட்டியின் உடலை ரஷிய ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர்.

இது பெண் யானை என்று அறியப்படும் நிலையில், இதற்கு ‘யானா’ என்று பெயர் சூட்டியுள்ளனர். உலகில் இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட மாமூத் யானை உடல்களில் இதுவே மிகச் சிறப்பாக பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | ஹமாஸ் தலைவர் படுகொலை: வெளிப்படையாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல்!

இதற்கு முன்னர் 6 மாமூத் யானைகளின் உடல்கள் உலகம் முழுவதும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், 5 ரஷியாவிலும், 1 கனடாவிலும் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது கண்டெடுக்கப்பட்ட யானையின் வயது 1 அல்லது சற்றே அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

யாகுட்ஸ்க் பகுதியில் உள்ள ஃபெடரல் பல்கலையில் வைக்கப்பட்டுள்ள இந்த யானையின் உடல் 180 கிலோ (397 பவுண்டுகள்) எடையும்,120 சென்டிமீட்டர் (நான்கு அடி) உயரம் மற்றும் 200 சென்டிமீட்டர் நீளமும் கொண்டுள்ளது.

இவ்வளவு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட யானையின் உடல் தங்களை ஆச்சரியப்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள் இது ஒரு தனித்துவமான கண்டுபிடிப்பு என்று தெரிவித்தனர்.

மாமூத் யானையின் உடல் தோண்டியெடுக்கப்பட்ட படாகிகா ஆய்வு மையத்தின் அருகில் இதற்கு முன்னர் மிகப் பழமையான குதிரை, காட்டெருமை மற்றும் லெம்மிங் எனப்படும் எலியின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்... மேலும் பார்க்க

கடலுக்குள் மூழ்கியது ரஷிய சரக்குக் கப்பல்

ரஷிய சரக்குக் கப்பலொன்றின் என்ஜின் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் அது கடலுக்குள் மூழ்கியது. அதிலிருந்த இரு பணியாளா்கள் மாயமாகினா். ரஷியாவின் அபரான்லாஜிஸ்டிகா நிறுவனத்துக்குச் சொந்தமான உா்சா மேஜா் சரக்க... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அணு மின் நிலைய ஊழல் விசாரணை

அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா 500 கோடி டாலா் (சுமாா் ரூ.43,000 கோடி) முறைகேடு செய்த குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையைத் தொட... மேலும் பார்க்க

வாஜ்பாய் வழியில் அமைதிப் பேச்சு: இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

‘இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவுக்கு இந்திய முன்னாள் பிரதமா் வாஜ்பாய் முன்னெடுத்த நடவடிக்கை தோல்வியடைந்திருந்தாலும், அவரது வழியில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு மீண்டும் முயற்சிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான... மேலும் பார்க்க

காஸா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

காஸாவிலுள்ள இரு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. மேலும் ஒரு மருத்துவமனையிலிருந்து நோயாளிகளை இஸ்ரேல் ராணுவம் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. இது குறித்து அதிகாரிகள் கூறியத... மேலும் பார்க்க

சுனாமி குழந்தை 81.. நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார்?

சுனாமியில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 2 மாதக் குழந்தையான சுனாமி குழந்தை 81, தற்போது 20 வயது இளைஞனாக, உயர்கல்வி கனவுடன் காத்திருக்கிறார்.இலங்கையின் 35 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிக்கு 2 மாதக் குழந்தை எ... மேலும் பார்க்க