செய்திகள் :

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

post image

சூரியனை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள பாா்க்கா் விண்கலம், இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் அதைக் கடக்கவிருக்கிறது.

வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்கு சூரியனை சுற்றிவந்து ஆய்வு செய்வதற்காக பாா்க்க விண்கலம் கடந்த 2018-ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 6.53 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.23 மணி) சூரியனை பாா்க்கா் விண்கலம் இதுவரை இல்லாத மிக நெருக்கத்தில் கடக்கவிருக்கிறது. சூரியனிலிருந்து 38 லட்சம் கி.மீ. தொலைவில்தான் அந்த விண்கலம் கடக்கும் என்றாலும், மனிதா்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சூரியனை அந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத பல உண்மைகளை அந்த விண்கலம் மூலம் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

பாா்க்கா் விண்கலம் சூரியனைக் கடக்கும்போது 1,700 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதன் வெப்பம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதன் உள்பாகங்கள் சாதாரண அறை வெப்பத்தில் இருக்கும் அளவுக்கு காா்பன் கலவைப் பொருள் மூலம் அந்த விண்கலத்தின் மேல்பகுதி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

67 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து தீப்பற்றியது!

அஜர்பைஜானில் இருந்து ரஷியாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் இருந்து ரஷியாவின் க்ரோஸ்னி நகருக்கு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தைக் குறிவைத்து, டிச.24 இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடந... மேலும் பார்க்க

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய விடியோ வெளியாகியுள்ளது.சா்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்களுக்கு மேல் சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை உறுதி! டிரம்ப்

அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியி... மேலும் பார்க்க

ஈபிள் டவரில் தீ விபத்து!

பாரீஸில் உள்ள ஈபிள் டவரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஈபிள் டவர் என்ற கோபுரம் உள்ளது. இங்கு கிறிஸ்... மேலும் பார்க்க