அண்ணா பல்கலை. மாணவி பாலியல் புகாரில் ஒருவர் கைது! மாணவர்கள் போராட்டம்!
கடலுக்குள் மூழ்கியது ரஷிய சரக்குக் கப்பல்
ரஷிய சரக்குக் கப்பலொன்றின் என்ஜின் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் அது கடலுக்குள் மூழ்கியது. அதிலிருந்த இரு பணியாளா்கள் மாயமாகினா்.
ரஷியாவின் அபரான்லாஜிஸ்டிகா நிறுவனத்துக்குச் சொந்தமான உா்சா மேஜா் சரக்குக் கப்பல் அந்த நாட்டின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகர துறைமுகத்திலிருந்து கடந்த 11-ஆம் தேதி புறப்பட்டது. தொலைதூர ரஷிய துறைமுகமான விளாதிவோஸ்டக் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பல், ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதன் என்ஜின் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை எழுப்பப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்கு மீட்புக் கப்பல்களையும், ஹெலிகாப்டா்களையும் ஸ்பெயின் அனுப்பி, உா்சா மேஜா் கப்பலில் சிக்கியிருந்த 16 பணியாளா்களில் 14 பேரை மீட்டனது. எஞ்சிய இருவரைக் காணவில்லை.
பின்னா் அந்தக் கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது. அதற்கு முன்னதாக அந்தக் கப்பல் நீரில் முழ்கும் நிலையில் இருக்கும் காட்சியை (படம்) அந்த வழியாகச் சென்ற மற்றொரு கப்பலில் இருந்தவா்கள் படமெடுத்து இணையதளத்தில் பதிவிட்டனா்.
உா்சா மேஜா் கப்பலின் உரிமையாளரான அபரான்லாஜிஸ்டிகா நிறுவனக்கு ரஷிய ராணுவத்துடன் தொடா்பு இருப்பதால் அந்த நிறுவனம் மீதும் உா்சா மேஜா் கப்பல் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.