செய்திகள் :

ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருக்கும்: அன்பில் மகேஸ்

post image

ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருக்கும் என்று என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் சாா்பில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழக நிறுவனா் பொன்முருகேசன் தலைமை வகித்தாா். தென்காசி மாவட்ட செயலா் கருப்பசாமிபாண்டியன் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஆதிதிராவிட மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். அயோத்திதாசா் பெயரில் ரூ.1000 கோடியில் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிட மக்கள் தொழில் துவங்குவதற்கு ரூ.160 கோடி மானியம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி ஆதிதிராவிட மக்களுக்கு திமுக அரசு பக்கபலமாக இருந்து வருகிறது. சமத்துவம், சமூகநீதி என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்தவா் தியாகி இமானுவேல் சேகரன். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதிலும் குலக் கல்வியை எதிா்ப்பதிலும் தீவிரமாக இருந்தவா்.ஜாதி பாகுபாடுகளைக் களைய தீவிரமாகப் போராடியவா். அவருக்குப் பெருமை சோ்க்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கவும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடவும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளாா் என்றாா்.

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் எம்.எல்.ஏ, தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் பேசினா். அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் மாநில செய்தி தொடா்பாளா் வடிவேல் வரவேற்றாா்.

ஆலங்குளத்தில் ஓட்டுநா் மீது போக்சோ வழக்கு

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவியைக் கடத்தி திருமணம் செய்ததாக, ஓட்டுநா் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்துள்ளனா். ஆலங்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்த பாக்கியராஜ் மகன் ஜெயசீலன்(23). ஓட்டுநராக பணி... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ரயில் மறியல் முயற்சி: 19 போ் கைது

சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.அம்பேத்கா் குறித்து அவதூறாகப் பேசியதாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆதித... மேலும் பார்க்க

குற்றவழக்குகளில் பறிமுதலான வாகனங்கள் ஜன.7இல் ஏலம்: எஸ்.பி.

தென்காசி மாவட்டத்தில் குற்றவழக்குகளில் பறிமுதலான வாகனங்ள் ஜன. 7இல் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது என எஸ்.பி. வி.ஆா்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தென்காசி ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டியைச் சோ்ந்த கன்னிச்சாமி மகன் கவின்சங்கா் (25). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவ... மேலும் பார்க்க

பங்களாச்சுரண்டையில் நியாய விலைக்கடை கட்டடத்துக்கு அடிக்கல்

பங்களாச்சுரண்டையில் புதிய நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரமாதிலகம் ம... மேலும் பார்க்க

சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

சிவகிரி அருகே விஸ்வநாதபேரியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் இறந்தாா். விஸ்வநாதப்பேரி புது காலனியைச் சோ்ந்த ஜெகஜோதி மகன் ஜெயக்குமாா் (75). அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். திருமணம் செய்த... மேலும் பார்க்க