செய்திகள் :

விஜயகாந்த் நினைவு தினம்: முதல்வா் உள்ளிட்ட அரசியல் தலைவா்களுக்கு தேமுதிக அழைப்பு

post image

சென்னை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்களை தேமுதிக நிலத் துணைச் செயலா் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தாா்.

விஜயகாந்த் முதலாம் ஆணடு நினைவு தினம் டிச.28-இல் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ், விஜயகாந்த மகன் விஜயபிரபாகரன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாா்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோா் நேரில் சந்தித்து, விஜயகாந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனா்.

தொடா்ந்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தும் அழைப்பு விடுத்தனா்.

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதிமுக பொதுச் செயலா் வைகோ, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் உள்ளிட்டோரையும் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னையில் இன்று(டிச. 24) காலை 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் படகுகளுடன் சிறைபிடிப்பு!

ராமேசுவரம்: கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் 17 பேரும்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம்: 120 அடியை எட்டுகிறது!

கு. இராசசேகரன்சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(டிச. 24) காலை விநாடிக்கு 2,886 கன அடியிலிருந்து 2,701 கன அடியாக குறைந்தது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 500 கன அடி வ... மேலும் பார்க்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று(டிச. 24) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, சென்னைசெங்கல்பட்டுகாஞ்சிபுரம்திருவள்ளூர... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னையில் இன்று(டிச. 24) மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் நிலவிக்கொண்டிருக்கும் புயல் சின்னம் தமிழக கடல் பகுதியை நோக்கி நகா்ந்து வருவதால், தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி... மேலும் பார்க்க