செய்திகள் :

கூடலூர்: CCTV-ஐ பொருட்படுத்தவே இல்லை; நள்ளிரவு டு அதிகாலை கொள்ளை முயற்சி - களமிறங்கிய காவல்துறை

post image

கேரளா மற்றும் கர்நாடகாவை தமிழ்நாட்டுடன் இணைக்கும் கூடல் நகராக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதி. மும்மாநில வாகன போக்குவரத்து நிறைந்த கூடலூர் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் நடமாடிய கொள்ளையன் ஒருவன் தனியார் நிதி நிறுவனங்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். கையுறைகள் அணிந்தும் தலை மற்றும் முகத்தை மறைத்துக் கொண்டு நடமாடிய கொள்ளையன், தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் கதவுகளை உடைத்து 2 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றுள்ளான். நள்ளிரவு முதல் அதிகாலை வரை கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு வந்த அந்த மர்ம நபரை தேடும் பணியில் களமிறங்கியிருக்கிறது காவல்துறை.

கொள்ளையன்

இது குறித்து பேசும் கூடலூர் காவல்துறையினர், " நகரின் பல பகுதிகளிலும் சி.சி.டி.வி கேமிராக்கள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் துணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான்‌. முகத்தை மறைத்துக் கொண்டு பல பகுதிகளிலும் விடிய விடிய கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். துணிகர கொள்ளையன், தொடர் கொள்ளை முயற்சி தொடரலாம் என்ற சந்தேகத்தில் இரவு ரோந்து பணிகளை தீவிரப்படுத்திருக்கிறோம். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொள்ளையனின் சி.சி.சி.டி.வி படங்களை வெளியிட்டுள்ளோம். அடையாளம் காண பொதுமக்களின் உதவியையும் நாடியிருக்கிறோம்" என்றனர்.

விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!

விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போ... மேலும் பார்க்க

சென்னை: விமான நிலையத்தில் தொடரும் உயர்ரக கஞ்சா கடத்தல் - சிக்கிய ’குருவிகள்’ - நீளும் விசாரணை

பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய... மேலும் பார்க்க

தேனி: செம்பு பாத்திரத்தை, இரிடியம் எனக் கூறி ரூ.10 லட்சம் `அபேஸ்' - திரைப்பட பாணியில் நடந்த மோசடி!

சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் விற்பனை மோசடியில் தேனி மாவட்டம், சின்னமனூர், போடி பகுதியைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

`வழிப்பறி முதல் போதைப்பொருள் வரை’ - குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பா?

போதை பொருள் விற்பனையும் சிக்கிய காவலரும்!தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருவது காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதை பொருள் விற்பனையைத் தடுக்க தனிப... மேலும் பார்க்க

அதிபர் வந்து சென்றும் தொடரும் அத்துமீறல்; ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் பாக் நீரினைப் பகுதியினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்குச் செல்ல... மேலும் பார்க்க