செய்திகள் :

சென்னை: விமான நிலையத்தில் தொடரும் உயர்ரக கஞ்சா கடத்தல் - சிக்கிய ’குருவிகள்’ - நீளும் விசாரணை

post image

பாங்காக்கிலிருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாங்காக் நகரில் இருந்து தனியார் பயணிகள் விமானம் சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு வந்தது. அதில் வந்திறங்கிய பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னை விமான நிலையம்

அப்போது 30 வயது மதிக்கத்தக்க சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் எழுந்தது. அதனால் அவரை தனியாக அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், சென்னையிலிருந்து சுற்றுலா பயணியாக தாய்லாந்துக்குச் சென்றுவிட்டு உடனடியாக அவர் சென்னை திரும்பிய தகவல் தெரியவந்தது. அதனால் அந்தப் பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவருடைய சூட்கேசில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதற்குள் 3.6 கிலோ பதப்படுத்தப்பட்ட, உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.3.6 கோடியாகும்.

இதையடுத்து, அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சர்வதேச போதைக் கடத்தல் கும்பலிடம் குருவியாக வேலை செய்வது தெரியவந்தது. இதனால் அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி போதைப் பொருள் கடத்தல் கும்பலின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கைது

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``சென்னை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சாவை கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்கதையாகியிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை சேர்ந்த பெண் பயணி ஒருவர் 2.8 கிலோ உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்தபோது எங்களிடம் சிக்கினார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 16- ம் தேதி 7.6 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த ஆண் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது மூன்றாவதாக 3.6 கிலோ உயர் ரக கஞ்சாவை கடத்திய வழக்கில் ஆண் பயணி ஒருவர் கைதாகியிருக்கிறார். கைதான பெண் உள்பட மூன்று பேரும் குருவிகளாக வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனால்தான் கடத்தல் கும்பலின் முழு நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகிறோம். கைதான மூன்று பேரையும் யார் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னையில் யாருக்காக இந்த கஞ்சாவைக் கொண்டு வந்தார்கள் என்ற விவரங்களை சேகரித்திருக்கிறோம். அதன்அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

விருதுநகர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை... என்ன நடந்தது?

மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்ட கிளை நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்துார்: கடன் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி; கணவன், மனைவி கைது!

விருதுநகர் மாவட்டத்தில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றதாக கணவன்-மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போ... மேலும் பார்க்க

தேனி: செம்பு பாத்திரத்தை, இரிடியம் எனக் கூறி ரூ.10 லட்சம் `அபேஸ்' - திரைப்பட பாணியில் நடந்த மோசடி!

சதுரங்க வேட்டை பாணியில் இரிடியம் விற்பனை மோசடியில் தேனி மாவட்டம், சின்னமனூர், போடி பகுதியைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தேனி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க

`வழிப்பறி முதல் போதைப்பொருள் வரை’ - குற்றச் செயல்களில் ஈடுபடும் போலீஸ் எண்ணிக்கை அதிகரிப்பா?

போதை பொருள் விற்பனையும் சிக்கிய காவலரும்!தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களின் விற்பனை படுஜோராக நடந்து வருவது காவல்துறையினருக்கும் பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. போதை பொருள் விற்பனையைத் தடுக்க தனிப... மேலும் பார்க்க

அதிபர் வந்து சென்றும் தொடரும் அத்துமீறல்; ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் பாக் நீரினைப் பகுதியினை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்குச் செல்ல... மேலும் பார்க்க

பார்ட்டியில் பாஸுடன் உறவுகொள்ள நிர்ப்பந்தம்; மறுத்த மனைவிக்கு முத்தலாக்? - ஐ.டி ஊழியர் மீது வழக்கு

இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது தடை செய்யப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து அச்சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. மும்பை அருகில் உள்ள கல்யாண் எ... மேலும் பார்க்க