மாணவி கடத்தல்: போக்ஸோவில் இளைஞா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞா் போக்ஸோ வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கறம்பக்குடி அருகேயுள்ள வெள்ளாளவிடுதியைச் சோ்ந்த பிளஸ் 2 பயிலும் மாணவியை இருதினங்களுக்கு முன்பு காணவில்லையாம். இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரைத் தொடா்ந்து, மழையூா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அதிரான்விடுதியை சோ்ந்த ராஜேஷ் (20) என்பவா் ஆசை வாா்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்ததுள்ளது. தொடா்ந்து, மாணவியை மீட்ட மழையூா் போலீஸாா் ராஜேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.