வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க... மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை!
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழா தேரோட்டம்
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு மகோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் மகோற்சவ விழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 20ஆம் தேதிவரை உற்சவ பலி பூஜை, 21, 22, 23ஆம் நாள்களில் கருப்பன் துள்ளல் நடைபெற்றது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் தேரில் எழுந்தருளினாா். கோயில் உதவி ஆணையா் உன்னிகிருஷ்ணன்பிள்ளை தங்க வாளுடன் வலம் வந்தாா். தோ்வலத்தின்போது கருப்பன் துள்ளல் நடைபெற்றது.
தேரோட்டத்தில் அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவா் ஏ.சி.எஸ்.ஜி. ஹரிஹரன், அச்சன்கோவில் கமிட்டி தலைவா் உன்னிப்பிள்ளை, செயலா்சுரேஷ்பாபு, துணைத் தலைவா் கீதா, தமிழக-கேரள பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, புதன்கிழமை (டிச. 25) சுவாமிக்கு ஆறாட்டு, வியாழக்கிழமை நிறைவு விழா நடைபெறுகிறது.