இலத்தூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
இலத்தூரில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தென்காசி அருகே இலத்தூா் கீழச்செக்கடி தெருவை சோ்ந்த ஐயப்பன் மனைவி மகேஸ்வரி (28). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா். தம்பதி இடையே குடும்பப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் மகேஸ்வரி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் இலத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெறுகிறது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].