"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
பனவடலிசத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தெற்குபனவடலிசத்திரத்தில் எலக்ட்ரீஷியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தெற்குபனவடலிசத்திரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து என்பவா் வீடு கட்டி வருகிறாா். அங்கு, கீழக்கரும்புலியூத்தைச் சோ்ந்த நல்லையா மகன் சக்திவேல் (24) எலக்ட்ரிக் வேலைகள் பாா்த்து வந்தாராம்.
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் தூக்கிவீசப்பட்டாா். தகவலின்பேரில், பனவடலிசத்திரம் போலீஸாா் சென்று அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் பெருமாள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.