செய்திகள் :

`ஓங்கி ஒலிக்கும் அதிகாரப் பகிர்வு முழக்கம் - திமுக, அதிமுக-வுக்கு நெருக்கடியா?’

post image

தி.மு.க தொடங்கி த.வெ.க வரை 2026 சட்டமன்ற தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டனர். இச்சூழலில் `ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி’ போன்ற முழக்கங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் முன்வைக்கின்றன. இவ்விவகாரம் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வை நெருக்கடிக்குள்ளாக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா

நம்மிடம் பேசிய அரசியல் விவரமறிந்தவர்கள், ``கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை பற்ற வைத்தது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் காங்கிரஸும்தான். வி.சி.க-வின் முன்னாள் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா `மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சி அதிகாரம் நோக்கியும் நகரும்’ என நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் பேசினார். பிறகு கடந்த் ஜூலை மாதம், ``கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. 2026-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்" என்று பேச ஆரம்பித்தனர் சில காங்கிரஸ் நிர்வாகிகள்.

கார்த்தி சிதம்பரம்

தொடர்ந்து பா.ஜ.க, தங்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனச் சொல்ல, பா.ம.க-வோ நாங்கள் இடம்பெறும் கூட்டணி, கூட்டணி ஆட்சியமைக்கும் என்றது. இதற்கிடையில் புதிதாக கட்சி ஆரம்பித்து மாநாடு நடத்திய நடிகர் விஜய், `ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்’ என பற்றவைத்தார். ஒருவகையில் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை பங்களிப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை துளிர்த்திருப்பது ஆரோக்கியமானது என்ற கருத்து இருந்தாலும் இக்கோரிக்கைகள் இடம்பெறுவதையே தி.மு.க மற்றும் அ.தி.மு.க விரும்பவில்லை என்பது ஓப்பனாகவே தெரிந்தது.

எடப்பாடி பழனிசாமி, விஜய்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ `ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்றிருக்கிறார். இந்த கருத்தை வலியுறுத்திய பேசிய ஆதவ் அர்ஜூனாவின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றது தி.மு.க தரப்பு. ஆகவே தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால்தான் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற வாய்ப்பிருக்கிறது” என்றனர்.

``அதிகாரப் பகிர்வு கோரிக்கையை நிறைவேற்ற இரு திராவிடக் கட்சிகளும் விரும்பவில்லை என்றாலும் அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தொடர்ந்து பேசியவர்கள் ``வலுவான கூட்டணி அமைக்க இயலாத அ.தி.மு.க, அதிகாரப் பகிர்வு கோரிக்கையை ஓர் ஆயுதமான பயன்படுத்தலாம்.

ரமதாஸ், திருமாவளவன், விஜய்

நடிகர் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரவும், பா.ஜ.க-வுடன் இருக்கும் பா.ம.க-வையோ, தி.மு.க-வுடன் இருக்கும் வி.சி.க-வையோ தன் கூட்டணிக்குள் கொண்டு வர கூட்டணி ஆட்சி கோரிக்கைக்கு இசைவளிக்கலாம். விஜய், அ.தி.மு.க கூட்டணி கணக்குகள் எடுபட்டு தி.மு.க கூட்டணி சிதறும் சூழல் ஏற்பட்டால் தி.மு.ககூட அதிகாரத்தை பகிர்ந்தளிக்க முன்வரலாம்.

திமுக, அதிமுகவுக்கு இந்த ஆட்சியில் பங்கு முழக்கம் தற்போது சிறு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது உண்மை தான். காரணம், `ஆட்சியில் பங்கு தர முடியாது’ என்று சொல்வதற்கான காரணங்கள் வலுவாக இல்லை. தேர்தல் நெருக்கத்தில், இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சி, வலுவாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கொள்ளும் எனில், ஆட்சியில் பங்கு எனும் கோரிக்கையை நிராகரிக்கலாம். ஆனால் கூட்டணி இன்றி வெற்றி சாத்தியம் இல்லை என நிலவரம் சென்றால், இந்த நெருக்கடிக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

அரசியல் எதுவும் சாத்தியம் என்பதுபோல மீதமிருக்கும் 15 மாதங்களில் தமிழ்நாடு அரசியல் நகர்வுகளில் கூட்டணி ஆட்சி கோரிக்கை என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது தெரியவரும்” என்றனர்!

2026 தேர்தல் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

டங்ஸ்டன் சுரங்கத்து வலுத்த எதிர்ப்புகள்... இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

மதுரையில் அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்ட நாள்முதல், இதற்கெதிராக அப்பகுதி மக்கள் தொடங்கி மாநில ஆட்சியா... மேலும் பார்க்க

திருவள்ளூர்: `குப்பை மேடான சென்னை டு நெல்லூர் தேசிய நெடுஞ்சாலை'; கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், செங்குன்றத்தை அடுத்து, நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கரனோடை என்ற புறநகர்ப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் அந்த இடமே குப்பை மேடாக மாறியிருக்கிறது. மே... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: வணிக வளாகத்தின் மோசமான நிலையை விவரித்த விகடன்.. சீரமைப்புப் பணியிலிறங்கிய அதிகாரிகள்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணாமலை வணிக வளாகங்கள் உள்ளது . இங்கு மொத்தம் 80-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நெட் சென்டர், போட்டோ ஸ்டூடியோ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `141 மனுக்கள்; 8 வருசமா அலையிறேன்; நடவடிக்கை?’ - ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய முதியவர்

மாவட்டந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் அலுவலங்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களிடம் மனுக்களைப் பெற்று உடனடி தீர்வு ஏற்படுத்தவே இந்த கூட்டம் கலெக்டர் தலைமையில் நடக்கிறது. ஆனால் ம... மேலும் பார்க்க

``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக விரும்புவதில் தவறில்லை'' - அமைச்சர் முத்துசாமி

காங்கிரஸ் மூத்த தலைரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.-வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கட... மேலும் பார்க்க

TVK Vijay: `சுயமரியாதைச் சுடர்; எங்கள் கொள்கைத் தலைவர்’ - பெரியாரின் 51வது நினைவு நாளில் விஜய்

தந்தை பெரியாரின் 51ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, பல்வேறு தலைவர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.இன்று வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகம் மற்றும் ... மேலும் பார்க்க