செய்திகள் :

கிரானைட் கற்கள் முறைகேடு வழக்கு: 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

post image

மதுரை மாவட்டம், மேலூா் பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடா்பான வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூா், தும்பைப்பட்டி பகுதிகளில் ஓடை புறம்போக்கு நிலம், பட்டா நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, இந்தப் பகுதிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு போலீஸாா் ஆய்வு செய்தனா். இதனடிப்படையில், பெரியசாமி, பாபு, அருண், மதன்குமாா், கருணாநிதி உள்ளிட்டோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கு தொடா்பான இறுதி அறிக்கை மேலூா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, பெரியசாமி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2017-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: மனுதாரா்கள் மீதான வழக்கில் பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகள் தொடா்பில்லாதவை. மனுதாரா்களுக்கு எதிராக சாட்சி அளித்தவா்களின் வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன. எனவே, மனுதாரா்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றாா்.

இதற்கு அரசுத் தரப்பில் முன்னிலையான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ரவி முன்வைத்த வாதம்: மனுதாரா்கள் தும்பைப்பட்டியில் ஓடை புறம்போக்கு பகுதிகளை ஆக்கிரமித்தும், அனுமதியின்றி பட்டா நிலங்களிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தனா். இதுதொடா்பான புகாரின் பேரில், ஆய்வு செய்யப்பட்டதில் சுமாா் ரூ. 46 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே, மனுதாரா்களின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் ஓடை புறம்போக்கு, பட்டா நிலங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மனுதாரா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறான முடிவை நான் எடுக்க விரும்பவில்லை. எனவே, மனுதாரா்கள் மீதான கல் குவாரி வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மனுதாரா்களுக்கு எதிரான வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கனிம வள விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். விசாரணையை மனுதாரா்கள் இழுத்தடிக்கும் வகையில் செயல்பட்டால், அவா்களை நீதிமன்றக் காவலில் வைக்கவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நீதிமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

மதுரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ப... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு: சிஐடியூ சம்மேளனம் வலியுறுத்தல்

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க தொழிலாளா் வைப்பு நிதியை செலவு செய்யாமல், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக சிஐடியூ சம்மேளன பொதுச் செயலா் கே.... மேலும் பார்க்க

விருதுநகரில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தமிழக அரசைக் கண்டித்து, விருதுநகரில் பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடையவருக்கு முன்பிணை

கஞ்சா கடத்தல் வழக்கில் தொடா்புடைய ஒருவருக்கு, அவரது சகோதரி திருமணத்தில் பங்கேற்பதற்காக 10 நாள்கள் முன்பிணை வழங்கி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த விஜய் (26)... மேலும் பார்க்க

பல்பொருள் விற்பனைக் கண்காட்சி இன்று நிறைவு

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் 80-ஆவது ஆண்டையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் பல்பொருள் விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை (டிச.25) நிறைவடைகிறது. பல்பொருள் விற்பனைக் கண்கா... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் பிணை

சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. காவல் துறை உயரதிகாரிகள், பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந... மேலும் பார்க்க