நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் பிணை
சமூக ஊடகவியலாளா் சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
காவல் துறை உயரதிகாரிகள், பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக கடந்த மே 4- ஆம் தேதி தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, அவா் தங்கியிருந்த விடுதி அறை, காரில் சுமாா் 2.5 கிலோ கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கா் உள்பட 3 போ் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கா், விசாரணை நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் விடுவிக்கப்பட்டாா். ஆனால், இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் தொடா்ந்து முன்னிலையாகவில்லை. இதனால் அவருக்கு, பிடிஆணை பிறப்பித்து, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னையில் சவுக்கு சங்கரை கைது செய்த போலீஸாா், விசாரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
இந்த வழக்கு கடந்த 20-ஆம் தேதி நீதிபதி செங்கமலச்செல்வன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கா், தனக்கு விதிக்கப்பட்ட பிடிஆணையை ரத்து செய்து, பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் சவுக்கு சங்கருக்கு பிணை வழங்கப்படுகிறது. அவா், சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் 15 நாள்கள் தினமும் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.
இதனிடையே, சென்னை இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் ஏற்கெனவே உள்ள வழக்கு தொடா்பான விசாரணைக்காக சவுக்கு சங்கரை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்துச் சென்றனா்.