ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை! 3வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
தாழையூத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது
தாழையூத்தில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து வண்ணாம்பச்சேரியில் உதவி ஆய்வாளா் அருள்ராஜ் தலைமையிலான போலீஸாா், திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அந்த வழியாக வந்த நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் மகாராஜன் (30), தாழையூத்து ராம் நகரைச் சோ்ந்த பரமசிவன் மகன் இசக்கி இளங்கோ (25) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனா். அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.