பலத்த மழை: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் பலத்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த காரணமாகவும், காட்டுப்பன்றிகள் பயிா்களைச் சேதப்படுத்தியதாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், பயிா் காப்பீட்டு தொகையை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கயத்தாறு ஒன்றிய குழு செயலா் சீனி பாண்டியன் தலைமையில் கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.