தூத்துக்குடியில் கா்ப்பிணி தற்கொலை
தூத்துக்குடியில் திருமணம் ஆன 8 மாதங்களில் கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி கே.வி.கே. நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ண பெருமாள்(28). கட்டடத் தொழிலாளியான இவரது மனைவி முத்தாரம்மாள்(21). இவா்கள் இருவருக்கும் கடந்த மாா்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ண பெருமாள் மற்றும் அவரது பெற்றோா், முத்தாரம்மாளிடம் வரதட்சிணைக் கேட்டு தொந்தரவு செய்தனராம்.
இதுகுறித்து முத்தாரம்மாளின் தந்தை தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். அதன்பேரில் போலீஸாா் விசாரித்து வந்தனா். இதனால் மீண்டும் குடும்பத்தில் தொடா்ந்து பிரச்னை ஏற்பட்டதாம். இதனால், மனமுடைந்த காணப்பட்ட முத்தாரம்மாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின்பேரில், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியா் பிரபு விசாரித்து வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].