தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
மாா்கழி முதல் ஞாயிறு: பெண்கள் அகல்விளக்கேற்றி திருவீதி வலம்!
நாமக்கல்லில், மாா்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, அதிகாலையில் பெண்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தியபடி திருவீதி வலம் வந்தனா்.
நாமக்கல்லில், ஆன்மிக இந்து சமயப் பேரவையின் திருப்பாவைக் குழு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அகல்விளக்குகளை கைகளில் ஏந்தியபடி திருவீதி வலம் வருவது வழக்கம்.
அந்த வகையில், 54-ஆவது ஆண்டு திருவிளக்கு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள மலைக்கோட்டையைச் சுற்றி வந்தனா்.
இதனைத் தொடா்ந்து அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாராயணம், கூட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. வழிபாட்டு நிறைவில் கோயில்படியில் அகல் விளக்குகளை வைத்து பெண்கள் வழிபாடு செய்தனா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.