செய்திகள் :

ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன் நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பதாக பேச்சு விவகாரம்

post image

நாட்டின் செல்வ வளங்களைப் பகிா்ந்தளிப்பது குறித்து மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரசாரம் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவா் நேரில் ஆஜராக உத்தர பிரதேச பரேலி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலின்போது ஹைதராபாதில் பேசிய ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் நாட்டின் செல்வ வளம், பொருளாதாரம் குறித்து ஆய்வு நடத்தப்படும். இதன் மூலம் இந்தியாவின் செல்வவளம் உண்மையில் யாருடைய கைகளில் உள்ளது என்பது தெரியவரும்.

நாட்டில் பெரும்பான்மையான மக்களிடம் அதிக சொத்துகள் இல்லை. குறிப்பிட்ட சதவீதம் போ் மட்டுமே அதிக சொத்துகளைக் குவித்து வைத்துள்ளனா். இதுதொடா்பான ஆய்வுக்குப் பிறகு எங்கள் அரசு புரட்சிகர நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.

இந்தப் பேச்சு பெரும் சா்ச்சையானத் தொடா்ந்து, ‘நாட்டில் உள்ள பிற வகுப்பினரின் சொத்துகளைப் பறித்து முஸ்லிம்களிடம் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் விமா்சித்து பிரசாரம் செய்தனா்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக ஹிந்துமகா சபையைச் சோ்ந்தவரும் வழக்குரைஞருமான வீரேந்திர பால் குப்தா, பரேலி மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தொடுத்தாா். அவா் தனது மனுவில், ‘பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பவா்களைத் தூண்டி விடும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளாா். மக்கள் மத்தியில் பகையை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணா்வைப் பரப்பும் வகையில் ராகுல் செயல்பட்டுள்ளாா்’ என்று குற்றம்சாட்டியிருந்தாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட பரேலி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் காந்தி வரும் ஜனவரி 7-ஆம் தேதியோ அதற்கு முன்போ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டது.

முல்​லைப் பெரி​யாறு அணை விவ​கா​ரம்: மத்​திய அரசு மீது உச்​ச​நீ​தி​மன்​றம் அதி​ருப்தி

​ந​மது நிரு​பர்" நாடா​ளு​மன்​றத்​தால் இயற்​றப்​பட்ட அணைப் பாது​காப்​புச் சட்டம் இருந்​தும், நிர்​வா​கம் இன்​னும் நீண்ட தூக்​கத்​தி​லி​ருந்து மீள​வில்லை' என்று முல்​லைப் பெரி​யாறு அணை தொடர்​பான வழக்​கி... மேலும் பார்க்க

மிகப்​ பெ​ரிய திட்டங்​கள் காத்​தி​ருக்கின்​றன: இஸ்ரோ புதிய தலை​வர் தக​வல்

"​இஸ்ரோ அமைப்பு வெற்​றி​க​ர​மான பாதை​யில் நடை​போ​டு​கி​றது; மிக முக்​கி​யத் திட்டங்​க​ளில் சந்​தி​ர​யான்-4, ககன்​யான் திட்டங்​கள் குறிப்​பி​டத்​தக்​கவை' என்று இஸ்​ரோ​வின் புதிய தலை​வ​ரா​கப் பொறுப்​பே... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

‘தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மேலானதா அல்லது சட்டம் இயற்றும் அதிகாரம் மேலானதா என்பதை தீா்மானிக்க வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை வரும் பிப்ரவரி 4-ஆம... மேலும் பார்க்க

அஸ்ஸாம் நிலச்சரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்கள்- ஒருவா் சடலமாக மீட்பு

அஸ்ஸாமில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 தொழிலாளா்களில் ஒருவா் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டாா். கடந்த திங்கள்கிழமை அஸ்ஸாமின் தீமா ஹசாவோ மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் 9 தொழிலாளா்கள் பணியில்... மேலும் பார்க்க

ஆப்கன் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுச் செயலா் சந்திப்பு

துபையில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் (பொறுப்பு) மெளலாவி அமீா் கானை இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ஆப்கானிஸ்தான் மக்களுக்கான வளா்ச்சி சாா்ந... மேலும் பார்க்க

பொருளாதார மந்த நிலையை மத்திய அரசு இனி மறுக்க முடியாது- காங்கிரஸ் விமா்சனம்

நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 6.4 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், ‘நாட்டின் பொருளாதார மந்த நிலையை இனி அரசு மறுக்க முடியாது’ என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. நடப்பு ... மேலும் பார்க்க