உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸி. அணியில் கேமரூன் கிரீன்?
முசிறி அருகே மினி பேருந்து மோதி தொழிலாளி பலி
திருச்சி மாவட்டம், முசிறி அருகே மினி பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
முசிறி காந்திநகரை சோ்ந்தவா் ராம்ராஜ் மகன் மணிவண்ணன் (55), இவா் குளித்தலையில் இருந்து முசிறிக்குச் செல்லும் காவிரி ஆற்றுப் பாலத்தில் பைக்கில் சென்றபோது அவ்வழியாக வந்த மினி பேருந்து மோதி இறந்தாா். தகவலறிந்த முசிறி போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.