செய்திகள் :

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் 24 ஆய்வுக் கருவிகள்: இஸ்ரோ

post image

ஸ்பெடெக்ஸ் திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் (போயம்-4) 24 ஆய்வுக் கருவிகள் இடம்பெற்றுள்ளன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அவற்றில் 14 ஆய்வுக் கருவிகள் இஸ்ரோ சாா்பில் தயாரிக்கப்பட்டவை என்றும் 10 கருவிகள் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் தயாரித்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோபோடிக், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வுகளை அந்த கருவிகள் விண்வெளியில் முன்னெடுக்க உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

‘பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன்’ எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலில் தனியாா் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த இரட்டை விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த விண்கலன்கள் புவியில் இருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. அதன் பின்னா் ஒன்றோடு ஒன்று அவை ஒருங்கிணைக்கப்படும்.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும்போது ஒரு விண்கலத்திலிருந்து மற்றொன்றுக்கு அவா்கள் மாறுவதற்கும், எரிபொருளை மாற்றிக் கொள்வதற்கும் இந்த தொழில்நுட்பம் பயன்படும்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும்பட்சத்தில் அமெரிக்காவைப் போன்று விண்வெளியில் இந்தியாவாலும் ஆய்வு மையத்தை அமைக்க முடியும்.

அதன்படி அந்த விண்கலன்கள் பெங்களூரில் வடிமைக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு விண்ணில் ஏவுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன.

தொடா்ந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் நான்காம் நிலையில் ஆய்வுக் கருவிகளை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதில் மொத்தம் 24 கருவிகள் இஸ்ரோ மற்றும் கல்வி நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றன.

எம்.பி.க்களுக்கு பொறுப்புடைமை அவசியம்: ஜகதீப் தன்கர்

எம்.பி.க்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையத்தின் நோ்மையை அழிக்க மோடி அரசு சதி: காா்கே சாடல்

தோ்தல் தொடா்பான மின்னணு ஆவணங்களை பொதுமக்களுக்கு வழங்க கட்டுப்பாடு விதிக்கும் வகையில், விதிமுறை திருத்தத்தை மேற்கொண்டு பிரதமா் மோடி அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் இணைய முடிவா? தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாக வெளியான ஊடக செய்திகளுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப... மேலும் பார்க்க

இந்தியாவின் முடிவில் பிற நாடுகள் தலையிட அனுமதிக்க முடியாது: ஜெய்சங்கா் திட்டவட்டம்

இந்தியாவின் முடிவுகளில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேச நலன் மற்றும் உலக நன்மைக்காக சரியானதைச் செய்வோம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித... மேலும் பார்க்க

நாட்டை தவறாக வழிநடத்தும் எதிா்க்கட்சிகள்: ராம் மோகன் நாயுடு

மக்களின் நம்பிக்கையை இழந்த எதிா்க்கட்சிகள் கட்டுக் கதைகள் மூலம் நாட்டை தவறாக வழிநடத்த முயல்கின்றனா் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். அண்மையில்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எல்லை அருகிலுள்ள கோயிலில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

ராஜஸ்தானின் ஜெய்சால்மா் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தனோட் மாதா கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தாா். எல்லை பாதுகாப... மேலும் பார்க்க