செய்திகள் :

ஒரே மாதத்தில் 70% விலை சரிவு... வெங்காய ஏலத்தை நிறுத்தி மகா. விவசாயிகள் மறியல்; வரி தான் காரணமா?

post image

நாட்டில் மகாராஷ்டிராவில்தான் வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதுவும் நாசிக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில்தான் வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் வெங்காயம் அருகில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. அதனை வியாபாரிகள் வாங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை வேகமாகச் சரிந்து வருகிறது. நாசிக் மாவட்டத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்காவ் சந்தையில் வெங்காய விலை ஒரே நாளில் 18 சதவீதம் அளவுக்குக் குறைந்துவிட்டது. ஒரு குவிண்டால் வெங்காயம் 700 ரூபாயிலிருந்து 2201 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது. இதனால் விவசாயிகள் வெங்காய ஏலத்தை நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

வெங்காயம்

இது தவிர நாசிக் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்களில் வெங்காயத்தின் விலை ஒரு மாதத்தில் 70 சதவீதம் அளவுக்குச் சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மொத்த சந்தையில் வெங்காயம் ஒரு குவிண்டால் 5252 ரூபாயிக்கு ஏலம் போனது. ஆனால் இப்போது ஏயோலா ஏ.பி.எம்.சி மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் 1500 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் வெங்காயத்தை ஏலம் விடவிடாமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஏலத்தைத் தொடங்கினர். விவசாயிகள் வெங்காயத்தை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாசிக் பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலைச் சந்தித்து வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 20 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இது குறித்து மகாராஷ்டிரா வெங்காய உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பரத் கூறுகையில், "மகாராஷ்டிரா மட்டுமல்லாது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்திலிருந்தும் வெங்காய வரத்து அதிகரித்து இருக்கிறது. வெங்காய வரத்து அதிகரித்து வருவதால் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அரசு உடனடியாக வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் 20 சதவீத வரியை நீக்க வேண்டும்" என்றார்.

வெங்காயம்

இது குறித்து வெங்காய விவசாயி கோரக் கூறுகையில், "வெங்காயத்தை விளைவிக்க ஒரு குவிண்டாலுக்கு1800 ரூபாய் செலவாகிறது. இப்போது உற்பத்தி செலவை விடக் குறைவாக வெங்காயம் விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே அரசு குவிண்டாலுக்கு 2000 ரூபாய் மானியம் கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

தஞ்சை: ஆற்றில் உடைப்பு; ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின... கவலையில் விவசாயிகள்!

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, நேமம் பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து கோனக்கடுங்கால் கிளை ஆறு பிரிந்து செல்கிறது. இந்த ஆறு திருவையாறு அருகே உள்ள வரகூர் உள்ளிட்ட கிராமங்களை கடந்து அம்மன்பேட்டை ... மேலும் பார்க்க

தொடர் மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்; வயலில் இறங்கி போராட்டம் நடத்திய தஞ்சை விவசாயிகள்!

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சாவூரில் பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வா... மேலும் பார்க்க

முல்லைப்பெரியாறு அணை; தளவாட பொருள்களுக்கு தடைபோடும் கேரளா- நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

தென் தமிழகத்திற்கு முக்கிய நீராதாரமாக இருக்கக்கூடியது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையில் இருந்து கிடைக்கும் நீரை நம்பி மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவ... மேலும் பார்க்க

'தேனீ வளர்ப்பு, காய்கறி வண்டிக்கு மானியம்' – புதுச்சேரி அரசு அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?

புதுச்சேரி அரசு வேளாண்துறையின் வேளாண் இணை இயக்குநர் (தோட்டக்கலை) சண்முகவேலு, 2024-2025 ஆண்டுக்கான தேனீ வளர்ப்பு உள்ளிட்டவற்றுக்கு மானியம் பெறுவது தொடர்பான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.அந்த அறிக்கையி... மேலும் பார்க்க

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன்ஜி.ஆனந்தகுமார்,தண்டுமேடு,திருவள்ளூர். 98406 62225 இயந்திரம் மூலம் சுற்றிய வைக்கோல் கட்டுகள்.வி.சந்திரன்,ஓசூர்,கிருஷ்ணகிரி. 93450 85499 கீழாநெல்லி, தும்பை, அம்மன் பச்சரிசி போன்ற மூல... மேலும் பார்க்க

மரக்காணம்: `வருசத்துக்கு ஒரு போகம்தான் அறுவடை; அதுக்கும் புயலால பாதிப்பு' - விவசாயிகள் குமுறல்!

ஃபெஞ்சல் சேதம் உயிர் சேதம், கட்டட சேதம் எவ்வளவு ஏற்படுத்தியிருக்கிறதோ, அதே அளவு பயிர் சேதமும் ஏற்படுத்தியிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயிர் சேதம் மற்றும்... மேலும் பார்க்க