செய்திகள் :

மரக்காணம்: `வருசத்துக்கு ஒரு போகம்தான் அறுவடை; அதுக்கும் புயலால பாதிப்பு' - விவசாயிகள் குமுறல்!

post image

ஃபெஞ்சல் சேதம் உயிர் சேதம், கட்டட சேதம் எவ்வளவு ஏற்படுத்தியிருக்கிறதோ, அதே அளவு பயிர் சேதமும் ஏற்படுத்தியிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயிர் சேதம் மற்றும் அந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை பற்றி நம்மிடம் பகிர்கிறார் மரக்காணத்தை சேர்ந்த விவசாயி நா.சீத்தாராமன்.

'மரக்காணத்துல கிட்டத்தட்ட 16,400 ஏக்கர் வேளாண் பயிர்கள், 8,000 ஏக்கர் தோட்ட பயிர்கள், 500 ஏக்கர் சவுக்கு பயிர்கள்னு மொத்தம் 24,900 ஏக்கர் பயிர்களுக்கு இப்ப பேஞ்ச மழைனால பலத்த சேதம். முக்கியமா, பங்கிம்காம் கால்வாய் மற்றும் கடல் ஒட்டி இருக்கற நெல் வயல்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு.

நேத்து முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாதிப்புகளை பார்வையிட வந்தாங்க. இன்னைக்கு அண்ணாமலை ஸ்பாட்ல இருக்காரு.

விவசாயி நா. சீத்தாராமன்

நேத்து சாயந்திரம் துறை அதிகாரிகள் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை ட்ரோன் மூலம் பாத்தாங்க. அப்புறம் வெள்ள நிவாரண விண்ணப்பத்தை விவசாயிங்க கிட்ட கொடுத்து ரெண்டு நாள்ல தர சொல்லியிருக்காங்க. இது எல்லாம் வேளாண் பயிர் மற்றும் தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு. ஆனா, சவுக்கு பயிர் போட்டவங்களுக்கு தான் குழப்பமா இருக்கு. சவுக்கு பயிர் தோட்டத்துறை, வனத்துறை, வேளாண் துறை எதுலயும் சேராது. அதனால, இந்தப் பாதிப்புகளுக்கு யார்கிட்ட மனு கொடுக்கறதுனு அந்த விவசாயிகளுக்கு தெரியாம திண்டாடிகிட்டு இருக்காங்க.

நாங்க ஏற்கெனவே சவுக்கு நாத்தை மானிய விலையில வனத்துறை மூலமா கொடுக்கணும்னு பல முறை கோரிக்கை வெச்சிருக்கோம். அதுமாதிரி இந்த சேதத்துக்கும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் வாங்கி தந்தாங்கனா விவசாயிகளுக்கு பெரிய உதவியா இருக்கும்.

பெரும்பாலும் மரக்காணம் பகுதி நெல் விவசாயிகள் ஒரு போகம் விவசாயம் தான் செய்வாங்க. இவங்க பெரும்பாலும் பாசனத்துக்கு ஆறு, ஏரியை தான் நம்பி இருப்பாங்க. வருசத்துக்கு ஒருமுறை வெக்கற பயிரும் இப்படி மழைல பாதிக்கப்பட்டதால அவங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இதுல வர்ற வருமானத்தை வெச்சு தான் அடுத்த போகம் வரை ஓட்டணும்ங்கற நம்பிக்கைல இருந்துருப்பாங்க. ஆனா, அதுக்கெல்லாம் சரியான அடி.

போன ஜனவரி மாசம் பேஞ்ச பருவம் தவறிய மழையால கூட நல்ல சேதம். அதுக்கும் இப்போ வரை எந்த நஷ்ட ஈடும் வரல. அதை விட, மொத்த விழுப்புரம் மாவட்டத்துல பாக்கும்போதும் தொடர்ந்து மூணு வருஷமா பயிர் காப்பீடு எதுவும் வரல. அதனால, விவசாயிகள் யாரும் இந்த வருசம் பயிர் காப்பீடு போடல. இதுவும் இந்த சேதத்துல அவங்களுக்கு பெரிய அடியா இருக்கும்.

விழுப்புரம் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகள்

இப்போதைக்கு எங்களோட முக்கிய கோரிக்கை சரியாக வெள்ள நிவாரணம் வந்து சேர்றது தான். காப்பீடு விஷயத்துல என்ன பிரச்னைனு எங்களுக்கு தெரியல. அதுவும் இப்போ கிடைச்சா விவசாயிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்று கூறுகிறார்.

`முல்லைப்பெரியாறு நீர் பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங்; அலட்சிய தமிழக அரசு'- விவசாயிகள் போராட்டம்

கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு எல்லைக்குள் வரும் ஆனவச்சால் பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் அத்துமீறி கட்டப்படும் கார் பார்க்... மேலும் பார்க்க

முதல்வர் Stalin -க்கே இங்கிருந்து திராட்சை போகுது |4 மாதத்தில் 4 லட்சம் லாபம்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திராட்சை விவசாயம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை அரை ஏக்கரில் செய்துகொண்டிருந்தவர் தற்போது 1 ஏக்கருக்கு விரிவுபடுத்தியிருக்கிறார். மேலும் பார்க்க

”48 கிராமங்கள்; 48 விவசாயிகள்; 48 பாரம்பர்ய நெல் ரகங்கள்” - உதயநிதி பிறந்தநாளில் நடிகர் அசத்தல்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் துரை சுதாகர். இவர் சமீபத்தில் வெளியான நந்தன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ... மேலும் பார்க்க

தஞ்சை: 'கடலா..? வயலா..?' - தொடர் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்; காரணமென்ன?

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

வேளாண்மை சந்தையில் களமிறங்கும் ஆளில்லா வானூர்திகள்! - சிறப்பம்சம் என்ன?

வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காகவும், மனிதர்களின் பாதுகாப்பிற்கு ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காகவும் அமெரிக்க நிறுவனங்கள் ட்ரோன்களை விட பெரிய தானியங்கி விமானங்களை உருவாக்கி வருகின்றன.இந்த வக... மேலும் பார்க்க

`இது புதுசா இருக்கே!' - பெங்களூரில் நிலக்கடலை திருவிழா புகைப்படத் தொகுப்பு | Photo Album

நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை திருவிழா நிலக்கடலை ... மேலும் பார்க்க