தேர்வு பயம்: பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள்!
குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளத்தை அகற்றக் கோரிக்கை
திருவாடானையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அண்ணாநகா் குடியிருப்புப் பகுதியில் மழை நீா் தேங்கியது. வெளியேற வழியில்லாததால், பல நாள்களாகத் தேங்கிய வெள்ளத்தால், கொசுப் புழுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குழாய் இணைப்பும் வெள்ளத்தில் மூழ்கியதால், பொதுமக்கள் குடிநீா் கிடைக்காமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் தேங்கிய வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.